Friday, August 20, 2010

நாயின் ஆதங்கம்

 மனிதர்கள் மனிதர்களை பற்றி அறிய மறந்தபோதும் , விலங்குகள்  ஆதங்கப்பட
மனிதர்களின் வாழ்க்கை அவல நிலைக்கு ஆளாகுகிறது...


ஆனந்தக்கடலில்
கரம் நீட்டிய அலைகள் !
ஆர்பரிக்கும் கடற்கரையில்

வெளியே துருத்திய  எலும்புடன்
பஞ்சடைத்த விழிகளுடன்
காய்ந்த சருகாய் காதுகள் தொங்க
சொட்டும் உமிழ்நீருடன்
நீண்ட நாக்குடன்
சிரிப்பதுபோல் வாய்பிளந்து
மனிதில் அழும் ஒரு சொறிநாய் !

அணிவகுத்து நிற்கும்
அருமையான பலசிலைகளை
அண்ணாந்து பார்த்து
ஓடி ஓடி நின்று மௌனமாய் முறையிட்டது !

கவிதை வரிகளிலே
தன்வருமையை மறைத்த பாரதி !
இரண்டு வரிகளிலே இல்லற தத்துவம் விளக்கிய  வள்ளுவன் !

எரிமலையின் சின்னமாய்
வாழ்வின் ஏக்கமும்
வாழ்வை தொலைத்த ஏமாற்றமும் தேங்க
கையில் சிலம்புடன் கண்ணகி !

ஆலை பலாவக்கலாமோ !
அருஞ்சுனங்கன் வாலை நிமிர்த்தலாமோ !
என்று எனை வம்புக்கிழுத்த ஔவை பாட்டியும்.

உழைத்து ஓடாய் நின்று
சிலையான கூலிகளே !
நீர்க்குமிழி வாழ்வில்
நிலயானதொன்றுமில்லை !

நானறிந்த இத்தத்துவத்தை
உங்களினம் மறந்ததேன் ??

26 comments:

  1. அம்மா சூப்பர் மா எப்படி இப்படிலாம் யோசிக்கிறே ??????
    அதுலயும் " வெளியே துருத்திய எலும்புடன்
    பஞ்சடைத்த விழிகளுடன்
    காய்ந்த சருகாய் காதுகள் தொங்க
    சொட்டும் உமிழ்நீருடன்
    நீண்ட நாக்குடன்
    சிரிப்பதுபோல் வாய்பிளந்து
    மனிதில் அழும் ஒரு சொறிநாய் !"

    நாயக்கூட எவ்ளோ அழகா வர்ணிக்கிறே !!

    " நானறிந்த இத்தத்துவத்தை
    உங்களினம் மறந்ததேன் ?? "

    சொல்லு சொல்லு நல்லா சொல்லு அப்போவான புரியட்டும் !!!

    வாழ்த்துக்கள் அம்மா நிறைய எழுதுங்க .....

    பின். கு : மக்களே இது என்ன பெத்த ஆத்தா தான்...மருவாதயா vote
    போடுங்க இல்ல ஏன் பதிவுலக நண்பர்கள் சார்புல சுமோ வரும்
    சொல்லிபுட்டேன் ஆமா ஹா ஹா

    ReplyDelete
  2. பிரேமாக்கா சூப்பர் ...பதிவுலகத்தில் உங்களை அன்புடன் வரவேற்கிறோம் ..வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அம்மா சூப்பர் மா
    என்ன ஒரு சிந்தனை
    கலக்குங்கோ!!

    ReplyDelete
  4. @சந்த்யா உங்கள் வரவேற்ப்புக்கு நன்றி


    @காயத்ரி உனாசைக்கு நன்றி


    @மணி உன் மரியாதைக்கு நன்றி

    ReplyDelete
  5. உங்களை வரவேற்கிறேன்! எழுதுங்க அருமையா இருக்கு!
    ///உழைத்து ஓடாய் நின்று
    சிலையான கூலிகளே !
    நீர்க்குமிழி வாழ்வில்
    நிலயானதொன்றுமில்லை !///

    கஷ்டபடும் ஏழைக்கு நாளைய பொழுது நலமாய் விடியும்னு சொல்ற மாதிரி இருக்கு. வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  6. வலைபதிவு அனுபவத்திற்கு வருக.

    வணக்கம் & வாழ்த்துக்கள்

    ReplyDelete
  7. //உழைத்து ஓடாய் நின்று
    சிலையான கூலிகளே !
    நீர்க்குமிழி வாழ்வில்
    நிலயானதொன்றுமில்லை !//

    nice.

    வலையுலகத்திற்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    ReplyDelete
  8. மிக்க மகிழ்வுடன்... வரவேற்கின்றோம்...
    தொடர்ந்து நிறைய எழுதுங்க...

    ReplyDelete
  9. இது போன்ற நிறைய விஷயங்களை எழுத வேண்டும் அம்மா

    ReplyDelete
  10. நல்லா எழுதி இருக்கிங்கமா...

    சிப்பியின் வயிற்றில் முத்து (பழசு)
    முத்தின் வயிற்றில் சிப்பி (புதுசு)

    காயத்ரி உங்க பொண்ணா? நீங்க இவ்வளோ நல்லா எழுதரிங்க...

    (சகோ சும்மா அம்மாவுக்கு ஐஸ் வைக்க... நீங்க கண்டுக்காதிங்க..)

    ReplyDelete
  11. //சிரியஸா இருப்பதில் நரசிம்மராவ் ! காமெடியா இருப்பதில் வடிவேலு ! மற்றவர்களை குறைசொல்வதில் கம்ப்யூட்டர் ! ஜாலியா இருப்பதில் வண்ணத்து பூச்சி ! வஞ்சம் தீர்ப்பதில் யானை ! என்னுடைய இடம் , ஆராய்ச்சி கூடம் !//

    மேல சொன்னது எல்லாம் யாரு..? ஏன்னா நா இப்ப தான் செவ்வாய் கிரகத்துலேர்ந்து வரேன் ஹி.ஹி..

    ReplyDelete
  12. //நாயின் ஆதங்கம்//

    ம் யாரையோ திட்றிங்கன்னு மட்டும் புரியுது....!




    ஆரம்பமே அசத்தலா இருக்கு .நிறைய எழுதுங்க விடாம ..

    ReplyDelete
  13. வருக வருகம்மா :)

    //பின். கு : மக்களே இது என்ன பெத்த ஆத்தா தான்...மருவாதயா vote
    போடுங்க//

    :) டோண்ட் ஒர்ரி உங்கள மாதிரி இல்லாம நல்லாவே எழுதுறாங்க. கேட்காமலே ஓட்டு விழும். :)))

    ReplyDelete
  14. வாழ்த்துக்கள் அம்மா..

    வலையுலகத்திற்கு உங்களை வாழ்த்தி வரவேற்கிறோம்.

    ReplyDelete
  15. கவிதை மிக நன்றாக உள்ளது! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  16. வருக வருக....

    கவிதை மட்டும்தான் எழுதப் போகிறீர்களா...?

    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வாங்க அம்மா!
    நல்ல கவிதை!

    ReplyDelete
  18. பிரேமா மேடம்.....

    வலையுலகில் காலடி எடுத்து வைத்த உங்களை வருக வருக என்று வரவேற்பதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன்...

    காயத்ரி சொல்லி உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன்... ஆஹா... சும்மா சொல்லக்கூடாது... அருமையான தமிழ் என்னை வரவேற்றது...

    எழுத்தில் ஒரு மயக்கும் வசீகரம் தெரிகிறது... படிப்பதை ஆழப்படித்து, எழுத்தாக்கும் வித்தை அறிந்தவரோ என்று வியக்க வைக்கிறது!!

    தொடர்ந்து எழுதுங்கள்.... நல்ல எழுத்துக்கு என்றும் எங்கள் ஆதரவு உண்டு மேடம்....

    ஆயினும், ஒரு சின்ன விஷயம்... சொல்ல தோன்றியது... அதனால் சொல்கிறேன்... மன வருத்தம் கொள்ள வேண்டாம்... நிறைய எழுத்து பிழை உள்ளது... சரி செய்யவும்...

    வாழ்த்துக்கள்.............

    ReplyDelete
  19. I like stories much...please write stories for me aunty!!

    ReplyDelete
  20. வாங்க , வாங்க மேடம் .
    கவிதைல ஆரம்பிச்சு இருக்கீங்க , தொடருங்கள்
    இப்படிக்கு
    வாழ்த்த வயதில்லாமல் வணங்குவோர் சங்கம்

    ReplyDelete
  21. Prema
    சிரியஸா இருப்பதில் நரசிம்மராவ் ! காமெடியா இருப்பதில் வடிவேலு ! மற்றவர்களை குறைசொல்வதில் கம்ப்யூட்டர் ! ஜாலியா இருப்பதில் வண்ணத்து பூச்சி ! வஞ்சம் தீர்ப்பதில் யானை ! என்னுடைய இடம் , ஆராய்ச்சி கூடம் ! ////

    இது நல்லா இருக்கே ???


    நீங்க வேஸ்ட்டு காயத்திரி

    ReplyDelete
  22. Prema miss....
    Remember me?? Shuba here ..
    I am glad to see you writing..

    Unga introduction eh romba kalakkal

    ReplyDelete
  23. @ என்னது நானு யாரா? : nandri..
    @ அருண் பிரசாத் : nandri
    @ Jey : nandri
    @ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) : nandri
    @ தோழி : nandri
    @ lk : nandri
    @ TERROR-PANDIYAN(VAS): nandri
    @ ஜெய்லானி : nandri
    @ வெறும்பய : nandri
    @ எஸ்.கே : nandri
    @ ஸ்ரீராம். : nandri
    @☀நான் ஆதவன்☀ ; nandri
    @ Balaji saravana : nandri
    @ R.Gopi : nandri
    @ sukanya : nandri
    @ மங்குனி அமைசர் : nandri
    @ dshuba : nandri

    ReplyDelete
  24. மனிதர்கள் மனிதர்களைப் பற்றி அறிய மறந்தபோதும்,
    விலங்குகள் ஆதங்கப்பட மனிதர்களின் வாழ்க்கை அவல நிலைக்கு ஆளாகுகிறது...

    ஆனந்தக்கடலில் கரம் நீட்டிய அலைகள் ! ஆர்ப்பரிக்கும் கடற்கரையில்
    வெளியே துருத்திய எலும்புடன்
    பஞ்சடைத்த விழிகளுடன்
    காய்ந்த சருகாய் காதுகள் தொங்க,
    சொட்டும் உமிழ்நீருடன் நீண்ட நாக்குடன்
    சிரிப்பது போல் வாய் பிளந்து
    மனதில் அழும் ஒரு சொறிநாய் !
    அணிவகுத்து நிற்கும்
    அருமையான பல சிலைகளை
    அண்ணாந்து பார்த்து
    ஓடி ஓடி நின்று மௌனமாய் முறையிட்டது !

    கவிதை வரிகளிலே
    தன் வறுமையை மறைத்த பாரதி !
    இரண்டு வரிகளிலே இல்லறத் தத்துவம் விளக்கிய வள்ளுவன் !
    எரிமலையின் சின்னமாய் வாழ்வின் ஏக்கமும் வாழ்வைத் தொலைத்த ஏமாற்றமும் தேங்க கையில் சிலம்புடன் கண்ணகி !
    ஆலை பலா ஆக்கலாமோ !
    அருஞ்சுனங்கன் வாலை நிமிர்த்தலாமோ !
    என்று எனை வம்புக்கிழுத்த அவ்வைப் பாட்டியும் !

    உழைத்து ஓடாய் நின்று சிலையான கூலிகளே ! நீர்க்குமிழி வாழ்வில் நிலயானதொன்றுமில்லை !

    நானறிந்த இத்தத்துவத்தை உங்களிடம் மனம் திறந்தேன் ??


    எழுத்துப் பிழைகள் இப்போது இல்லை என்று நினைக்கிறேன்

    ReplyDelete