Saturday, August 28, 2010

புதிர்

ஜனனம் முதல் மரணம் வரைக்
குத்தப்படும் முத்திரைகள்
ரணம் எது , பூரணம் எது
புரியாது செல்லும் வாழ்கை
மாறிவிடும் அனைத்தும்
நமைத் தவிர
நினைப்பது நடப்பதில்லை
நடப்பதில் திருப்தி இல்லை
பகைவன் அருகில்
நண்பன் தொலைவில்
இருக்கும் புதிரான உலகம்
புரிவதற்குள் முடிந்துவிடும் வாழ்வு
விஷம் அமுதாகும் நல்
அமுதும் விஷமாகும்
காலத்தின் கோலத்தை மாற்ற
கடவுளால் மட்டும் முடியும்
அவனிடம் வைக்கும் பக்தி
கடலில் கரைசேர்க்கும் கப்பலாகும்
கொடியில் வேரில் வெந்நீர் ஊற்றி
எதிர்பார்க்கும் பூவும் காயும்
எங்கே வரும் ?


Copyrighted

Friday, August 20, 2010

நாயின் ஆதங்கம்

 மனிதர்கள் மனிதர்களை பற்றி அறிய மறந்தபோதும் , விலங்குகள்  ஆதங்கப்பட
மனிதர்களின் வாழ்க்கை அவல நிலைக்கு ஆளாகுகிறது...


ஆனந்தக்கடலில்
கரம் நீட்டிய அலைகள் !
ஆர்பரிக்கும் கடற்கரையில்

வெளியே துருத்திய  எலும்புடன்
பஞ்சடைத்த விழிகளுடன்
காய்ந்த சருகாய் காதுகள் தொங்க
சொட்டும் உமிழ்நீருடன்
நீண்ட நாக்குடன்
சிரிப்பதுபோல் வாய்பிளந்து
மனிதில் அழும் ஒரு சொறிநாய் !

அணிவகுத்து நிற்கும்
அருமையான பலசிலைகளை
அண்ணாந்து பார்த்து
ஓடி ஓடி நின்று மௌனமாய் முறையிட்டது !

கவிதை வரிகளிலே
தன்வருமையை மறைத்த பாரதி !
இரண்டு வரிகளிலே இல்லற தத்துவம் விளக்கிய  வள்ளுவன் !

எரிமலையின் சின்னமாய்
வாழ்வின் ஏக்கமும்
வாழ்வை தொலைத்த ஏமாற்றமும் தேங்க
கையில் சிலம்புடன் கண்ணகி !

ஆலை பலாவக்கலாமோ !
அருஞ்சுனங்கன் வாலை நிமிர்த்தலாமோ !
என்று எனை வம்புக்கிழுத்த ஔவை பாட்டியும்.

உழைத்து ஓடாய் நின்று
சிலையான கூலிகளே !
நீர்க்குமிழி வாழ்வில்
நிலயானதொன்றுமில்லை !

நானறிந்த இத்தத்துவத்தை
உங்களினம் மறந்ததேன் ??