Monday, September 20, 2010

விழுதினை தாங்கும் மரம் - 1

" சீனு...சீனு...அட நாசமா போறவனே ! எங்கே போய் தொலைஞ்சே ? " பூமி அதிர நடந்து வந்தாள் வத்சலா." அம்மா...இங்கதம்மா....வர்ரேன்மா" என்று கூறிக்கொண்டே ஓடிவந்தான். 

" ஸ்கூல்லேட்டாகி தொலைஞ்சா யார்ரா பதில் சொல்றது? குளிக்க வந்து தொலை " என்று தரதரவென்று இழுத்து கொண்டு போனாள்.பலியாடு போல் பின்னாலேயே ஓடியது குழந்தை... 

" ஹாலில் பெருக்கிக் கொண்டிருந்தாள் வசுந்தரா ( மாமியார் ) என்பதைவிட அம்மா என்று கூறலாம். இருந்தாலும் இருவருக்கும் அக்னி நட்சத்திர பொருத்தம் தான் .வத்சலாவிடம்  , எதையாவது இசைக்கு பிசக்காக கூறிவிட்டு கனலடிக்கும் வார்த்தைகளை வாங்கிக் கட்டிகொல்வது வசுந்திராவின் பழக்கம்! அதேதான்  அன்றும் நடந்தது. 

சொத்..சொத்தென ஏதோ அடிபடும் சத்தம் கேட்டது.பாத்ரூம் பக்கம் சென்று பார்த்தாள் வசுந்தரா..மருமகள் பேரனை அடிப்பதை பார்த்து அதிர்த்துதான் போனாள்." ஏம்மா..வத்சலா இப்படி அடிக்கிறியே அதென்ன குழந்தையா இல்லைமண் பொம்மையா ? " 

" உம்புருஷனை நானும் தான் படிக்கவச்சேன் வளர்த்தேன். காட்டுமிராண்டி மாதிரி நடந்து கொண்ட நாளே கிடையாது ! இதெல்லாம் சரியில்ல பொறுமையா இருக்க பழகு " என்று கூறினாள் படபடக்க. 

" உங்களுக்கு ஒன்னும் தெரியாது.படிப்பில் அக்கறை இருந்தாதான்  உருப்படமுடியும் சும்மா இருங்கோ.உங்க வேலைய பாருங்கோ " என்றாள் வத்சலா.

இந்த நெத்தியடியய் வசுந்தராவால் ஜீரணிக்க முடியவில்லை வத்சலா மீண்டும் தொடர்ந்தாள்."நல்லா வளர்தீங்க பிள்ளையை கீரிப்பிள்ளை 
மாதிரி ! என்னையும் கட்டிபோட்டு பிராணனை வாங்குறீங்க..யார் எது சொன்னாலும் கேக்க கூடாது ஏன் சபதம் செஞ்சுருக்கர் உங்க பிள்ளை.

அவரை போல அசமஞ்சமா என் பிள்ளையை நான் வளர்க்க மாட்டேன் 
இவனாவது  நான் சொல்றதை கேட்டு உருப்படட்டும் . என்பில்லையை வளர்க்க எனக்கு தெரியும் சம்பந்தமில்லாத மூக்க நுழைக்கதீங்க என்றாள் அடத்தலாக.படபடவென பொரிந்து தள்ளிய வத்சலாவைக் கண்டு மாமியார் வசுந்தரா உறைந்து போனாள் .

"எனக்கு சம்பந்த மில்லையா பேரனை அடிக்கதேன்னு சொல்ல எனக்கு உரிமையில்லையா ? என்ன பேச்சு பேசற வத்சலா...இந்தவீட்ல எனக்கு சம்பந்தம் இல்லை உரிமை இல்லை என்றால்.யாருக்கும்மா இருக்கு..கோவத்துல கண்மூடித்தனமா எதையும் பேசாதே " என்றாள் வசுந்தரா. 

" அதெல்லாம் எனக்கு தெரியாது என்பில்லையை நான் ஒழுங்கா வளர்க்கணும் நாளைக்கு எங்களுக்கும் வயதாகும் போது எங்களுக்கும் ஆதரவா சீனு இருக்கும்படி நல்ல நிலைக்கு கொண்டு வரணும் , அதற்க்கு தடையாக யார் வந்தாலும் மரியாதை கெட்டுபோகும் " என்றாள் வசுந்தரா..
வாயைமூடி மௌனமானாள் வசுந்தரா..." ச்சே என்ன பொண்ணு இவள் ? இப்படி யானை மாதிரி தூக்கியடிக்கிறாளே ! " என்று மனதுக்குள் நொந்து கொண்டாள். 

காலைநேர வேலைகளெல்லாம் ஓய்ந்து மதியம் சற்று கண்ணயர நினைத்தாள் வசுந்தரா.மருமகளின்  வார்த்தைகள் ஒலித்துக்கொண்டே இருந்தது. தலைவலி வந்துதவிக்க ஆரம்பித்தாள். எப்படியெல்லாம் கஷ்டப்பட்டு குடும்பத்தை முன்னுக்கு கொண்டு வந்தோம். இப்படி எச்சில் இலையாய் தூக்கியடிக்க பட்டோமே என மனதிற்குள் அழுதாள். 
 
வத்சலாவை தேடினாள்.வீட்டில் எங்கும் காணவில்லை.தலைவலி மாத்திரையும் காப்பியும் சாப்பிட்டால் தலைவலி போகும் என்று அதற்க்கான ஏற்பாடுகளை செய்தாள் வசுந்தரா , வெளியே சென்று வந்த வத்சலா கையில் சில சாமான்களின் பாக்கெட்டுகள் ,  அரிசிமூட்டை பின்னால் வர உள்ளே நுழைந்தாள்  

" சற்று இளைப்பாறி உட்கார்ந்தவளை வசுந்தரா கூப்பிட்டாள். அம்மா வத்சலா..
உன்கிட்ட பேசணும் சில விஷயங்கள் தவிர்க்க முடியாதது " என்றாள் 

"காலையில் வந்த கோவம் அடங்கியதாக தெரியவில்லை உனக்கு கோவம் சீனு மேலயா?இல்லை என் மேலயா ? ஏன் இப்படி அர்த்தமில்லாம எரிஞ்சுவிழற ? சொல்லு. "

வீட்டு வேளைக்குவைக்கும் வேலைக்காரி கூட மரியாதையை எதிர்பார்க்கிறாள்..இரண்டு வேளை காபி டிபன் சாப்பாடு டிவி , தீபாவளி பொங்கல் இத்தனை ஆயிரம் சலுகைகளை கொடுத்தான் ஆயிரம் இரண்டாயிரம் சம்பளமும் கேட்கிறாள். அவளை எதிர்த்து பேச உங்களுக்கெல்லாம் பயம் . வேலைக்காரிக்கு கொடுக்கும் மரியாதை கூட மாமியாருக்கு இல்லாத போச்சா..அப்படியென்ன உனக்கு கெடுதல் பண்ணேன்.சொல்லு வத்சலா" என்றாள்

பேசிக் கொண்டிருந்த மாமியாரைத் திரும்பிய் கூட பார்க்காமல்விடுக்கென்று
எழுந்து  போனாள் வத்சலா. கட்டிய புருஷன் உயிரோட இருந்தாஏச்சு பேச்சுக்கு ஆளாவோமா ? தலையெழுத்து இப்படியா போகணும் எனதன்னைத் தானே நோன்துகொண்டாள் வசுந்தரா.

" பணம் என்ன மரத்துலையா காய்க்குது?இஷ்ட்டதுக்கு வாரித்தூத்துவதுக்கு எங்க மாமனார் வீடும் சொத்துமா செர்த்துவச்சுருகார் ? கஷ்டப்பட்டு சம்பாதிக்குரதுதான் சிக்கனமாக வைத்துக்கொள்ள முதல்ல பழகிக்கொங்க "
என்றாள் வத்சலா.

" என்ன வத்சலா இப்படி பேசற? இந்த வீட்ல சாப்டக்கூட எனக்கு உரிமை இல்லையா? இதை ஏன் பண்ணே? அதையேன் பண்ணேன்னு என்னையே அதிகாரம் பன்றியே.என்ன ஆச்சு உனக்கு? நீ கொடுத்தான் எவ்ளோவோ செலவுபண்ற நான் ஏதாவது கேக்கறேனா? உன்புருஷன் சம்பாத்தியம், உரிமையோட நே செலவுபன்றே, என் பில்லைவீடுன்னு நான் காபிகூட குடிக்க கூடாதா? நல்ல சட்டம்மா நல்லா இருக்கு " என்றாள் வசுந்தரா .

" இனி நீங்களும் நானும் ஒரே வீட்ல இருப்பது கஷ்டம் " என்று ஒரே வார்த்தையை கூறிவிட்டு பெட்ரூமுக்கு போய் கதவை சாத்திக்
கொண்டாள் வத்சலா

வசுந்தராவுக்கு இப்போதுதான் அவள் நிலை புரிந்தது இனி இதற்க்கு முடிவு தேட வேண்டும் என்று நினைத்தாள் வசுந்தரா.

மாலைநேரம் குழந்தை சீனு ஹோம் வொர்க் பண்ணிக் கொண்டிருந்தான். 
புயல் அடித்து ஓய்ந்த அமைதியாக காட்சியளித்த வீட்டினுள், நுழைந்தான் ரவி , அவன்தான் குடும்பா தலைவன்.

" என்னம்மா சீனு? என்னம்மா ஹோம் வொர்க் எழுதரியா? " என்று கேட்டுக்கொண்டே நுழைந்தவன், "வத்சலா...வத்சலா.."கூப்பிட்டான், 
மெளனமாக வந்து நின்றாள்..

ஒரு மனுஷன் வேளை செஞ்சு கலைத்து வீடு திரும்பினா இப்படியா முகத்தை 
தூக்கி வச்சுப்பே ?...சரி காபி கொண்டா " என்றான்.

எல்லா வேலையும் முடித்துக்கொண்டு படுக்கைக்கு வந்தாள் வத்சலா..
"என்ன நடக்குது இந்தவீட்ல?? நீ ஒரு பக்கம் அம்மா ஒரு பக்கம் முகத்தை திருப்பிக்கொண்டு நிற்கிறீர்கள் "என்று கேட்டான் ரவி

ஆரம்பித்தான் சீனு " அப்பா...அப்பா...அம்மாவும் பாட்டியும் சண்டை போட்டாங்க நான் ஸ்கூல் போயிட்டேன் " என்றான்...
தொடரும்.


*copyrighted

Saturday, August 28, 2010

புதிர்

ஜனனம் முதல் மரணம் வரைக்
குத்தப்படும் முத்திரைகள்
ரணம் எது , பூரணம் எது
புரியாது செல்லும் வாழ்கை
மாறிவிடும் அனைத்தும்
நமைத் தவிர
நினைப்பது நடப்பதில்லை
நடப்பதில் திருப்தி இல்லை
பகைவன் அருகில்
நண்பன் தொலைவில்
இருக்கும் புதிரான உலகம்
புரிவதற்குள் முடிந்துவிடும் வாழ்வு
விஷம் அமுதாகும் நல்
அமுதும் விஷமாகும்
காலத்தின் கோலத்தை மாற்ற
கடவுளால் மட்டும் முடியும்
அவனிடம் வைக்கும் பக்தி
கடலில் கரைசேர்க்கும் கப்பலாகும்
கொடியில் வேரில் வெந்நீர் ஊற்றி
எதிர்பார்க்கும் பூவும் காயும்
எங்கே வரும் ?


Copyrighted

Friday, August 20, 2010

நாயின் ஆதங்கம்

 மனிதர்கள் மனிதர்களை பற்றி அறிய மறந்தபோதும் , விலங்குகள்  ஆதங்கப்பட
மனிதர்களின் வாழ்க்கை அவல நிலைக்கு ஆளாகுகிறது...


ஆனந்தக்கடலில்
கரம் நீட்டிய அலைகள் !
ஆர்பரிக்கும் கடற்கரையில்

வெளியே துருத்திய  எலும்புடன்
பஞ்சடைத்த விழிகளுடன்
காய்ந்த சருகாய் காதுகள் தொங்க
சொட்டும் உமிழ்நீருடன்
நீண்ட நாக்குடன்
சிரிப்பதுபோல் வாய்பிளந்து
மனிதில் அழும் ஒரு சொறிநாய் !

அணிவகுத்து நிற்கும்
அருமையான பலசிலைகளை
அண்ணாந்து பார்த்து
ஓடி ஓடி நின்று மௌனமாய் முறையிட்டது !

கவிதை வரிகளிலே
தன்வருமையை மறைத்த பாரதி !
இரண்டு வரிகளிலே இல்லற தத்துவம் விளக்கிய  வள்ளுவன் !

எரிமலையின் சின்னமாய்
வாழ்வின் ஏக்கமும்
வாழ்வை தொலைத்த ஏமாற்றமும் தேங்க
கையில் சிலம்புடன் கண்ணகி !

ஆலை பலாவக்கலாமோ !
அருஞ்சுனங்கன் வாலை நிமிர்த்தலாமோ !
என்று எனை வம்புக்கிழுத்த ஔவை பாட்டியும்.

உழைத்து ஓடாய் நின்று
சிலையான கூலிகளே !
நீர்க்குமிழி வாழ்வில்
நிலயானதொன்றுமில்லை !

நானறிந்த இத்தத்துவத்தை
உங்களினம் மறந்ததேன் ??