Saturday, August 28, 2010

புதிர்

ஜனனம் முதல் மரணம் வரைக்
குத்தப்படும் முத்திரைகள்
ரணம் எது , பூரணம் எது
புரியாது செல்லும் வாழ்கை
மாறிவிடும் அனைத்தும்
நமைத் தவிர
நினைப்பது நடப்பதில்லை
நடப்பதில் திருப்தி இல்லை
பகைவன் அருகில்
நண்பன் தொலைவில்
இருக்கும் புதிரான உலகம்
புரிவதற்குள் முடிந்துவிடும் வாழ்வு
விஷம் அமுதாகும் நல்
அமுதும் விஷமாகும்
காலத்தின் கோலத்தை மாற்ற
கடவுளால் மட்டும் முடியும்
அவனிடம் வைக்கும் பக்தி
கடலில் கரைசேர்க்கும் கப்பலாகும்
கொடியில் வேரில் வெந்நீர் ஊற்றி
எதிர்பார்க்கும் பூவும் காயும்
எங்கே வரும் ?


Copyrighted

5 comments:

  1. பிரேமாக்கா கவிதை சூப்பர் ..எல்லா வரிகளும் ரொம்ப அருமையா இருக்கு..பகிர்வுக்கு நன்றி ..

    ReplyDelete
  2. ஆல் டைம்..இப்படித்தான் போகுதுமா வாழ்க்கை..அருமை..

    ReplyDelete
  3. சண்டையில கிழியாக சட்டை எங்க இருக்கு மேடம்...

    நாம எல்லாருக்குமே ஏறக்குறைய இப்படி தானே போகுது வாழ்க்கை....

    ஆனாலும், எழுத்து மிக நன்றாக உள்ளது.... (நான் ஏற்கனவே சொன்ன, சில பிழைகளை தவிர...)

    ReplyDelete
  4. ரெம்ப நல்லா எதார்த்த வரிகள்... கலக்குறீங்க

    ReplyDelete
  5. நல்லாயிருக்கும்மா. வரிகள் அருமையா இருக்கு

    ReplyDelete